
மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கின்றது.
மாநிலத்தில் பாஜக 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், சிபிஐ(எம்) ஆர்எல்பி மற்றும் பிஏபி ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மஞ்சு ஷர்மா 2,27,642 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலும், ராஜ்சமந்த் தொகுதி பாஜக வேட்பாளர் மஹிமா குமாரி 2,06,606 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
பாஜகவின் தாமோதர் அகர்வால் (பில்வாரா) மற்றும் பகீரத் சவுத்ரி (அஜ்மீர்) 1,85,135 மற்றும் 1,97,046 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் (பிகானேர்) 28,142 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளனர், கஜேந்திர சிங் ஷெகாவத் (ஜோத்பூர்), மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோட்டா)ஆகியோர் 19,079 மற்றும் 12,543 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
மத்திய அமைச்சர் கைலாஷ் சௌத்ரி 1,27,564 வாக்குகள் வித்தியாசத்தில் 3வது இடத்தில் உள்ளார். காங்கிரஸின் முராரி மீனா 1,22,070 வாக்குகள் வித்தியாசத்தில் தவுசாவில் முன்னிலையில் உள்ளார்.
பன்ஸ்வாரா தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சி வேட்பாளர் ராஜ்குமார் ரோட் 1,13,680 வாக்குகள் வித்தியாசத்திலும், ஆர்எல்பி வேட்பாளர் ஹனுமான் பெனிவால் 9,696 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னணியில் உள்ளனர்.
சிகார் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அம்ரா ராம் 43,820 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.