
இந்தியா கூட்டணியுடன் தெலுங்கு தேசத்தை இணைக்கப்போவதில்லை என்று கட்சி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், இந்தியா கூட்டணியுடன் சேர்க்க தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, அதிக இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.
இந்த நிலையில், ஆந்திர மாநில பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கத் தயாராகி வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான ஷரத் பவார் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக தகவல்கள வெளியாகின. இந்தியா கூட்டணிக்கு சந்திர பாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுபோன்ற எந்த அழைப்பையும் தான் மேற்கொள்ளவில்லை என்று ஷரத் பவார் விளக்கம் கொடுத்திருந்தார்.
இதற்கிடையே தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருப்போம் என்றும் இந்தியா கூட்டணியில் சேர மாட்டோம் என்று தெலுங்கு தேசம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.