
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்.
ஒடிசா மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.
இதன்மூலம் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா வேட்பாளர்களுடன் நவீன் பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்.
பட்நாயக் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலைமுதலே அவரின் இல்லத்தில் முகாமிட்டனர்.
கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் பேசிய நவீன் பட்நாயக், மாநிலத்தில் வறுமையை ஒழிக்க கடுமையாக போராடினோம். இதன் விளைவாக வறுமைக்கோட்டில் இருப்போரின் விகிதம் 10%ஆக குறைந்தது. விவசாயம், நீர்ப்பாசனம், பெண்கள் மேம்பாடு என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.