
ஒடிசாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சியின் பாராளுமன்ற குழு விரைவில் தீர்மானிக்கும் என அந்த மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஒடிசாவை சேர்ந்தவரே முதல்வராக்கப்படுவார் என மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாராளுமன்ற குழு விரைவில் முடிவெடுக்கும் மற்றும் ஒடியா (ஒடிசாவை சேர்ந்தவர்) ஒருவர் முதல்வராக பிரதமர் அறிவித்தபடி ஜூன் 10-ம் தேதி பொறுப்பேற்பார். முதல்வர் யாரென்பதை ஒன்று அல்லது இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒடியா மொழியை பேசக் கூடிய, புரிந்துகொள்ளக் கூடிய மண்ணின் மைந்தரே ஆட்சி பொறுப்பேற்பார் என தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
தர்மேந்திர பிரதான், பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் பைஜயந்த் பாண்டா ஆகிய மூத்த பாஜக தலைவர்களின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக ஒடிசா மாநிலத்தில் தனித்து ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. முன்னதாக 2000 மற்றும் 2004-ல் பிஜு ஜனதா தளத்துடனான கூட்டணியில் பாஜக இடம்பெற்று ஆட்சி அமைத்தது.
முந்தைய அரசு கொண்டுவந்த பல நலதிட்ட திட்டங்கள் நீக்கப்பட்டு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பதிலீடு செய்யப்படும் என பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.