
பாலிவுட் நடிகையும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத், தில்லி செல்வதற்காக சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, வந்தபோது விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கௌர் அவரை கன்னத்தில் அறைந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில்,” ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. நான் பாதுகாப்பாக இருக்கிறேன்,எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன். சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் செக்யூரிட்டி ஒருவர் என் முகத்தில் அறந்தார். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். ஆனால், பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து கவலை கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களால் குல்விந்தர் கௌர் அதிருப்தி அடைந்திருந்ததால், அவர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.