
ஒய்எஸ்ஆர்சிபி தொண்டர்களின் மீது, தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்குமாறு ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேசப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில், ”புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்பே தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரத்தில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவடுவதுடன், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். ஒய்எஸ்ஆர்சிபி கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கிராம செயலகங்கள் மற்றும் உழவர் சேவைமையம் போன்ற தனியார் மற்றும் அரசு சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. காவல்துறையும் ஆளுங்கட்சியின் அழுத்தங்களினால் அடிபணிந்துள்ளது. ஒய்எஸ்ஆர்சிபி-யின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியின்போது நிலவிய அமைதி சிதைந்துவிட்டது. இவ்வாறான, தெலுங்கு தேசம் கட்சியினரின் அட்டூழியங்களைக் கட்டுப்படுத்துமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.