இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மோடியை கலாய்த்த காங்கிரஸ்!

பிரதமர் நரேந்திர மோடியை கலாய்த்து காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2024, 12:52 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடியை கலாய்த்து காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 240 இடங்களில் வென்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16, பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களைக் கைப்பற்றின.

பெரும்பான்மைக்குத் தேவைப்படும் எண்ணிக்கையான 272 இடங்களை பாஜக தனியாக கைப்பற்றாத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கவுள்ளது.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களான சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சா் பதவிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ’எங்கப் பக்கம் வாருங்கள்’ என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நிதிஷ் குமார் ஒரு பக்கமும், சந்திரபாபு நாயுடு ஒரு பக்கமும் இழுப்பது போன்று சித்திரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை கலாய்த்து காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.