பெண்ணை கேலி செய்ததால் கொலை: இளைஞர் கைது!

பெண்ணை கேலி செய்ததால் 27 வயது நபர் கொலை: இளைஞர் கைது!
பெண்ணை கேலி செய்ததால் கொலை: இளைஞர் கைது!

தென்கிழக்கு தில்லியில் ஒரு பெண்ணை கேலி செய்ததால் 27 வயது நபர் கொல்லப்பட்டதாகவும் அவரை கொலை செய்த நபரை கைது செய்துள்ளதாகவும் சன்லைட் காலனி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

முகமது ஜாவேத் (35) என்பவர் கொலை செய்துள்ளதாகவும் இவர் மீது ஏற்கெனவே பல குற்றவியல் வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.

உயிரிழந்தவர் ரோஹித் என்கிற மோக்லி எனக் காவலர்கள் கண்டறிந்துள்ளனர். பட்ட பகலில் மக்கள் திரளுக்கு மத்தியில் ஜாவேத் கத்தியால் ரோஹித்தை குத்தியுள்ளார்.

அதன் பிறகு தலைமறைவான ஜாவேத்தை உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரத்தம் படிந்த சட்டை மற்றும் கொலைக்கான ஆயுதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஜாவேத் தங்கையாக கருதி வந்ததும் அவரை ரோஹித் கேலி செய்து வந்ததும் பலமுறை அதனை கண்டித்த போதும் ரோஹித் நிறுத்தாமல் தொடர்ந்ததால் ஜாவீத் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஜாவேத் மற்றும் ரோஹித் இருவரும் போதை பழக்கமுள்ளவர்கள். 2 நாள்களுக்கு முன்பு இதே விவகாரத்தில் இவர்களிடையே மோதல் உருவாகியுள்ளது. அப்போது ரோஹித் ஜாவேத்தை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜாவேத் கத்தியால் ரோஹித்தை குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே ரோஹித் பலியானார்.

இந்த வழக்கு குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com