ராகுல் உயர்த்திப் பிடித்ததால் விறுவிறுப்பாக விற்பனையாகும் புத்தகம்!

இந்தாண்டில், இதுவரை 5,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்.
ராகுல் உயர்த்திப் பிடித்ததால் விறுவிறுப்பாக விற்பனையாகும் புத்தகம்!
DOTCOM
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

இது லக்னெளவைச் சேர்ந்த கிழக்கு புத்தக கம்பெனி(ஈஸ்டர்ன் புக்) வெளியிட்ட சிவப்பு - கருப்பு நிற அட்டையிலான அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகமாகும்.

தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த புத்தகத்தை கையில் ஏந்தியபடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி வாய்ப்பு என்றும் பிரசாரம் செய்து வந்தார்.

ராகுல் உயர்த்திப் பிடித்ததால் விறுவிறுப்பாக விற்பனையாகும் புத்தகம்!
அமைச்சர் பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி
ANI

இந்த நிலையில், ராகுல் காந்தி கையில் உயர்த்திப் பிடித்திருந்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த புத்தகத்தின் 10-வது பதிப்பை வெளியிட்டுள்ள கிழக்கு புத்தக கம்பெனி, இந்தாண்டு தொடங்கி 6 மாதங்களில் இதுவரை 5.000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஓராண்டு முழுவதுமே 5,000 புத்தகங்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு புத்தக கம்பெனியின் அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பை எழுதியவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com