ஒய்எஸ்ஆர்சிபி தொண்டர்களின் மீது, தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சியில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அக்கட்சியிலிருந்து தலித் ஒருவரும் அவரது மனைவியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் தலித்தை தாக்கி, மண்டியிடவைத்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் நாரா லோகேஷ் சுவரொட்டி முன் மன்னிப்பு கேட்கச் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மேலும் மற்றொரு சம்பவத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் காளிதாசா வெங்கட சத்யநாராயணாவை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் அப்துல்லா கத்தியால் தாக்கியுள்ளார். இதில் சத்யநாராயணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேசப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஒய்எஸ்ஆர்சிபி தொண்டர்களின் மீது, தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்குமாறு ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்திருந்தார்.
இருந்தபோதிலும், ஆந்திரத்தில் வன்முறைகள் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.