ஆந்திர அமைச்சரவையில் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன்!

ஆந்திர அமைச்சரவையில் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன்!

சந்திரபாபு நாயுடுவுடன் 24 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
Published on

ஆந்திரப் பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சரவையில் இடம்பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையில் ஜனசேனை மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தனர்.

இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 135 இடங்களில் தெலுங்கு தேசம் மட்டும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது.

இந்த நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கவுள்ளார். அவருடன் 24 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

அமைச்சர்களின் பட்டியலை சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். அதில், பவன் கல்யாண், நாரா லோகேஷ் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com