
குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 12) ஆலோசனை மேற்கொண்டார்.
குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 49 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அல்-அடான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களில் இந்தியத் தொழிலாளர்களும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மற்றும் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி வர்தன் சிங், அவசர ஆலோசனைக்காக பிரதமர் அழைத்ததாகவும், தீ விபத்து தொடர்பாக விரிவான தகவல்களை கேட்டறிந்ததாவும் கூறினார். மேலும், பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக குவைத் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவிற்குள் - +91 1800 309 3793
வெளிநாடு - +91 80 6900 9900, +91 80 6900 9901
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.