
உ.பி. மாநிலத்தில் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிக் கொன்ற இளைஞரின் விடியோ வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசம் புலாந்தஷர் பகுதியில் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.இல் குர்ஜா நகரின் சுடுகாட்டில் இந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல்லு என்றழைக்கப்படும் அத்னன் என்ற நபர்தான் இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரிகிறது.
சஞ்சய் தத்தின் கல்நாயக் படம் இந்தக் கொலையை செய்ய உத்வேகம் ஊட்டியதாக கூறியுள்ள அந்த நபர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
கொலை செய்த நபர் விடியோவில் கூறியதாவது:
எனது காதலி இன்னொரு நபருடன் உறவில் இருந்ததால் கொலை செய்தேன். ஏமாற்றினால் கொலைதான் சரியான தண்டனை. நான் சஞ்சய் தத்தின் ரசிகன். எனது 2.5 ஆண்டு கால சம்பாத்தியத்தை பயன்படுத்தி ஏமாற்றியவருக்கு கொலைதான் சரியான தண்டனை. எனது நண்பர்கள் என்னை ஏமாற்றினால் அவர்களுக்கும் இதே தண்டனைதான். எனது குடும்ப உறுப்பினர்கள் மீது யாராவது கை வைத்தால் அவர்கள் அனைவரையும் கொலை செய்வேன் அவர்களது வீட்டின்மீது குண்டு வீசுவேன் என்றார்.
சஞ்சய் தத்தின் கல்நாயக் படம் இந்தக் கொலையை செய்ய உத்வேகம் ஊட்டியதாக கூறியுள்ளார். ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகர் சஞ்சய் தத். சமீபத்தில் தமிழில் வெளியான லியோ, ஜவான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 4 திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமாக்களை சினிமாவாக பார்க்காமல் தவறாக எடுத்துகொள்வது மக்களின் தவறு என்றும் சினிமாக்களில் பொறுப்புணர்வு தேவை என்றும் சமூக வலைதளங்களில் இதுகுறித்து கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.