
மும்பை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 11-13 ஆகிய தேதிகளில் மட்டும் சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சுமார் ரூ. 6 கோடியே 64 லட்சம் மதிப்பிலான 10.50 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளது.
டிராலி சூட்கேஸின் சக்கரங்களுக்குள், பேருந்தின் இருக்கைக்கு அடியில், உடலிலும், உடலிலும் மெழுகு, தங்கக் கட்டிகள் என பல்வேறு வடிவங்களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரையில் ஐந்து பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சௌதி அரேபியாவின் ஜித்தா மற்றும் துபை ஆகிய இடங்களிலிருந்து மும்பைக்கு பயணித்த ஐந்து இந்திய பயணிகளை சோதனை செய்ததில், மெழுகு போன்ற வடிவில் 24 கேரட் தங்கத் தூளை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் மொத்த நிகர எடை 5 கிலோ 800 கிராம் ஆகும். உடலில் மறைத்து வைத்து கொண்டுவந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அடிஸ் அபாபா மற்றும் நைரோபி ஆகிய இடங்களிலிருந்து பயணித்த நான்கு வெளிநாட்டு பயணிகளை சோதனை செய்ததில் பெண் ஒருவர் அணிந்திருந்த புர்காவின் வலது பக்க பாக்கெட்டில் மற்றும் உடலில் மறைத்துவைத்து 1363 கிராம் தங்கத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
துபை, பாங்காக், கொழும்பு, ஷார்ஜா ஆகிய இடங்களில் இருந்து பயணித்த 5 இந்திய பயணிகள் 1785 கிராம் தங்கத்தை டிராலி சூட்கேஸின் சக்கரங்களுக்குள்ளும், உடலிலும் மறைத்து வைத்திருந்துள்ளார்.
விமான நிலைய கட்டிடத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெழுகில் ரூ.98 லட்சத்து 78 ஆயிரத்து 275 மதிப்புள்ள 1550 கிராம் 24 கேரட் தங்கத் தூள் கண்டுபிடிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.