போப் பிரான்சிஸ் கோவா வருவார்: கோவா முதல்வர் நம்பிக்கை

போப் பிரான்சிஸ், இந்தியா வருகையில் கோவா வரவேண்டும் என கோவா முதல்வர் நம்பிக்கை
போப் பிரான்சிஸ் கோவா வருவார்: கோவா முதல்வர் நம்பிக்கை

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வருவதாக இருந்தால், போப் பிரான்சிஸ் இந்தியப் பயணத்தில் கோவாவும் இருக்கவேண்டும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் போப் பிரான்சிஸை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வருவதாக இருந்தால், போப் பிரான்சிஸின் இந்தியப் பயணத்தில் கோவாவும் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, போப் பிரான்சிஸை சந்தித்தார். மக்களுக்கு சேவை செய்வதற்கான போப் பிரான்சிஸின் உறுதிப்பாட்டைப் பாராட்டினார், பிரதமர் மோடி. பின்னர், இந்தியாவுக்கு வருகை தருமாறு போப்பிற்கு அழைப்பும் விடுத்தார். போப் பிரான்சிஸ் இந்தியாவிற்கு வருவதாக இருந்தால், அவரது இந்தியப் பயணத்தில் கோவாவும் இருக்கவேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சாவந்த் கூறியுள்ளார்.

கோவாவின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவிகிதம் கிறிஸ்துவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் 50-ஆவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணம், பசானோ நகரில் வியாழக்கிழமை தொடங்கியது.

இத்தாலி பிரதமா் ஜார்ஜியா மெலோனி இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார். இது தவிர, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜொ்மனி பிரதமா் ஓலஃப் ஷால்ஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனா்.

இத்தாலியின் அபுலியாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டையொட்டி போப் பிரான்சிஸுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போப் பிரான்சிஸை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com