ஆந்திரத்தில் கிராமப்புற கல்வியை வலுப்படுத்த கவனம் செலுத்தும் நாரா லோகேஷ்!
முதல்வர் என் சந்திரபாபு நாயுடு என் மீது நம்பிக்கை வைத்து முக்கிய இலாகாவான மனித வளம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் துறையை ஒதுக்கியதற்காக அமைச்சர் நாரா லோகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் தனது எக்ஸ் தளத்தில் அமைச்சரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் கூறுகையில், “வாழ்வாதாரக் கல்வியை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான எனது பயணத்தைத் தொடங்கும்போது, அமைச்சராக எனது முந்தைய அனுபவம் சிறப்பாகப் பயன்படும் என்று நான் நம்புகிறேன். நமது மாநிலம், வளர்ந்து வரும் தொழில்களில் வேலைகளைத் பெறுவதற்கு நமது இளைஞர்களையும் திறமையாக்குகிறது.
தகவல் தொலைத்தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனங்களை ஈர்க்கவும், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நேரத்தில், ஆந்திரம் மற்ற மாநிலங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எங்கள் கட்சி பாடுபடும்” என்றார்.
கேஜி முதல் பிஜி வரையிலான கல்வி முறையில் தீவிர சீர்திருத்தங்களை கொண்டு வருவேன் என்று தனது பாதயாத்திரையின் போது அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்த நாரா லோகேஷ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் முறையில் கிராமப்புறங்களில் கல்வி முறையை வலுப்படுத்துவது தனது கடமை என்று உணர்கிறேன்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஓய்வூதியத்தைஉயர்த்தியதன் மூலம் ஏழைகள் மீதான தனது பாசத்தை தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியத்தை, 3,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு, 3,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாகவும், பல்வேறு தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1,000, 2000 முதல் 15,000 வரையிலும் உயர்த்தியுள்ளார்.
மேலும், சிறுநீரக நோயாளிகளின் ஓய்வூதியமும் 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. “ மக்களின் நலன் என்பது இதுதான், ஏழைகள் மீது ஒருவர் தனது பாசத்தை இப்படித்தான் காட்ட வேண்டும். ஓய்வூதியத்தை வெறும் 1,000 ரூபாயால் உயர்த்துவதற்கு முந்தைய அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.