மகாராஷ்டிரத்தில் செல்போன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு? போலீஸ் விசாரணை

கைப்பேசிக்கு வரும் ஓடிபி குறுஞ்செய்தி மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என புகார்...
மகாராஷ்டிரத்தில் செல்போன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு? போலீஸ் விசாரணை
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பாஜக கூட்டணி எம்.பி.யின் உறவினர் மீது புகார்! கைப்பேசிக்கு வரும் ஓடிபி குறுஞ்செய்தி மூலம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவசேனை(ஷிண்டே அணி) கட்சியை சேர்ந்த எம்.பி. ரவீந்திர வாய்க்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர் மீது தேர்தல் விதிமீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) கட்சியை சேர்ந்த வேட்பாளர் அமோல் கஜஞ்சனை விட வெறும் 48 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் சிவசேனை(ஷிண்டே அணி) கட்சியை சேர்ந்த ரவீந்திர வாய்க்கர்.

இதையடுத்து அத்தொகுதியில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக காவல்துறையினருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் விதிகளை மீறி, எம்.பி. ரவீந்திர வாய்க்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர் கைப்பேசியை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

இதனிடையே, இது தொடர்பாக தேர்தல் ஆணையப் பணியாளர் ஒருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர். அவர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு கைப்பேசியை வழங்கியதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிவசேனை(ஷிண்டே அணி) கட்சியை சேர்ந்த எம்.பி. ரவீந்திர வாய்க்கர்
சிவசேனை(ஷிண்டே அணி) கட்சியை சேர்ந்த எம்.பி. ரவீந்திர வாய்க்கர்படம் | ரவீந்திர வாய்க்கர் எக்ஸ் தளப் பதிவு

வாக்கு எண்ணிக்கை நாளன்று(ஜூன் 4), காலை தொடங்கி மாலை 4.30 மணி வரை அவர் கைப்பேசியை பயன்படுத்தியதும், வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து பல பேருடன் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.

அவர் பயன்படுத்திய கைப்பேசிக்கு வந்த ஓடிபி குறுஞ்செய்தி மூலம், வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை(இவிஎம்) செயல்பட வைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல்துறை தரப்பிலிருந்து 3 குழுக்கள் அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் வசமுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான தகவல்கள், பதிவுகள் மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com