
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் பகுதியில் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளரும், காவல் துறைத் தலைவருமான அமோல் வி.ஹோம்கர் கூறுகையில், “டோண்டோ மற்றும் கோயில்கேரா பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு மாவோயிஸ்டுகளில், மண்டல தளபதி, துணை மண்டல தளபதி, பகுதி கமாண்டர் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் கொல்லப்பட்டனர். ஒரு பெண் உள்பட இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
மேலும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.