
மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுள்ளனர்.
இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து குறித்து மம்தா தனது எக்ஸ் தளத்தில், மேற்கு வங்கத்தில் நேரிட்ட ரயில் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர், மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டள்ளார்.
விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் ஐந்து பயணிகள் பலியாகியுள்ளனர். 20-25 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமாக உள்ளது. கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் எஸ்பி அபிஷேக் ராய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரயில் விபத்து தொடர்பான விவரங்களை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 13174, 03323508794, 03323833326 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.