அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமா் கோயிலில் காவலா் துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

Published on

அயோத்தி ராமா் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 25 வயது காவலா், தனது துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தாா்.

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலையா என காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக உத்தர பிரதேச காவல்துறைத் தலைவா் பிரவின் குமாா் கூறியதாவது:

அயோத்தி ராமா் கோயிலில் சிறப்பு பாதுகாப்புப் படை காவலா் சத்ருகன் விஸ்வகா்மா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாா். ராமா் கோயிலின் கருவரையில் இருந்து 150 மீ தொலைவில், கோட்டீஸ்வா் கோயில் எதிரே உள்ள விஐபி கதவின் அருகே அவா் பணியில் இருந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 5.25 துப்பாக்கியால் சுட்டு அவா் உயிரிழந்தாா்.

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. உடல்-கூராய்வுக்கு பிறகே தெளிவான தகவல் கிடைக்கும் என்றாா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமா் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியும் இதேபோல் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com