
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “யோகா என்பது மனிதகுலத்திற்கு கொடுக்கப்பட்ட இந்தியாவின் தனித்துவமான பரிசு. வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னைகளுக்கு யோகா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ராஷ்டிரபதி பவனில் யோகாசனம் செய்தார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “சர்வதேச யோகா தினத்தில் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும், இந்தியாவின் குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். யோகா என்பது மனிதகுலத்திற்கு இந்தியாவின் தனித்துவமான பரிசு. அதிகரித்து வரும் வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னைகளுக்கு யோகா மிகவும் முக்கியமானதாகிவிட்டது. யோகா என்பது உடல், மன, ஆன்மிக நல்வாழ்வுக்கான ஒரு வழியாகும். நமது அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகாவை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.