
கடந்த கால நிகழ்வுகளை தூக்கி சுமக்காமல் நிகழ்காலத்தில் மக்கள் வாழ உதவும் யோகாவை நன்மைக்கான சக்திவாய்ந்த முகவராக உலகம் பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறினார்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி “மக்கள் தங்கள் நலன், உலக நலனுடன் இணைந்திருப்பதை உணர யோகா உதவியுள்ளது. உலக நன்மைக்கு முக்கியமான, சக்திவாய்ந்த முகவராக யோகாவை உலகம் பார்க்கிறது. கடந்தகால நிகழ்வுகளை பற்றி நினைக்காமல், தற்போது நலமாக வாழ யோகா உதவுகிறது. நமது உள்ளுணர்வு அமைதியாக இருக்கும்போதுதான், உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். யோகா சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கு புதிய வழிகளை உருவாக்குகிறது” என்றார்.
ஜம்மு- காஷ்மீரின் தால் ஏரியின் கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மைய புல்வெளியில் இந்த நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இடைவிடாத மழை காரணமாக ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு உள்புற மையத்துக்கு மாற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.