
தமிழகத்தில் கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலம் கலபுர்கி விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக விமான நிலையத்தில் சோதனைப் பணிகள் தொடங்கியுள்ளன.
விமான நிலைய வளாகத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, விமான நிலைய இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத முகவரியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் படையினர் விரைந்து வந்து, விமான நிலையம் முழுவதும் சோதனை செய்து வருகிறார்கள்.
விமான நிலையத்தில் ஏற்பட்ட பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யும் பணியானது நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, விமான நிலையம் முழுவதும் சோதனை செய்யும் பணியானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக தமிழகத்தில் இன்று கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்திலும் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.