கோப்புப்படம்
கோப்புப்படம்

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு!

மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின் படி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

மத்திய அரசின் 50 ஆண்டு கால விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதையடுத்து, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருத்தப்பட்ட மத்திய சிவில் சர்வீஸ் (விடுப்பு) விதிகள் 1972-ன் கீழ், வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பும், குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுப்பும் அளிக்கப்படுகிறது.

இந்த முறையில், வாடகைத் தாய் மற்றும் அவர் மூலம் குழந்தையைப் பெறும் தாய், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே அரசு ஊழியர்களாக இருந்து, இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 180 நாள்கள் வழங்கப்படும் என்றும் பணியாளர் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெறும் தந்தை அரசு ஊழியராகவும், இரண்டுக் குழந்தைகளுக்கு குறைவாகப் பெற்றவராகவும் இருந்தால், குழந்தை பிறந்த 6 மாத காலத்திற்குள் 15 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள புதிய விதிகளில் அனுமதிக்கப்படுகிறது.

கோப்புப்படம்
பொற்கோவிலில் யோகா செய்த பெண் மீது வழக்குப்பதிவு!

மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் தாய்க்கு இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருந்தால் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு எடுக்க மத்திய சிவில் சர்வீஸ் (விடுப்பு) புதிய விதிகள் 2024-ன் படி அனுமதிக்கப்படுகிறது.

தற்போதுள்ள விதிகளின் படி, பெண் அரசு ஊழியர் மற்றும் தனி பெற்றோராக இருக்கும் ஆண் அரசு ஊழியருக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பாக, இரண்டு குழந்தைகளின் கல்வி, உடல்நலம் மற்றும் இதரத் தேவைகளுக்கு அவர்களுடைய மொத்தப் பணிக் காலத்தில் 730 நாள்கள் விடுப்பு வழங்கப்படுகின்றன.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கு தற்போது வரை எந்த சட்டமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com