

மக்களவையில் சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூன் 24) மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றபோது, சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையின் இடைக்காலத் தலைவர் பா்த்ருஹரி மகதாப், எம்.பி.யாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசமைப்புப் புத்தகத்தை தங்கள் கைகளில் உயர்த்திப் பிடித்தபடி மோடியை நோக்கி காண்பித்தனர்.
எனினும், அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல், தான் மக்களவை உறுப்பினராக பதவியேற்பதில் மட்டுமே மோடியின் கவனம் இருந்தது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.