புது தில்லி: கென்யாவில் வன்முறை காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘கென்யாவில் உள்ள அனைத்து இந்தியா்களும் தேவையற்ற பயணங்களைத் தவிா்த்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்தியா்கள் செல்ல வேண்டாம்’ என்று கோரப்பட்டுள்ளது.
கென்யாவில் சுமாா் 20,000 இந்தியா்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.