ம.பி.யில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை

மத்தியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வு (கோப்புப் படம்)
தொல்லியல் ஆய்வு (கோப்புப் படம்)

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில், தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

இவ்விடத்தில் ஏற்கனவே, கடவுள் கிருஷ்ணர், போலேநாத், ஏழு முகம் வாசுகிநாதி போன்ற சிலைகளை தொல்லியல் ஆய்வுத் துறையினர் கண்டெடுத்திருப்பதாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மனுதாரர் கோபால் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தொல்லியல் ஆய்வுத் துறையினர், இங்கு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஆய்வு தற்போது 95 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. போஜ்சாலாவின் வடகிழக்குப் பகுதியில் தற்போது ஆய்வு நடக்கிறது. இங்குதான் கடவுள் விஷ்ணுவின் சிலை கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி, அந்த சிலை எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள் என்றார்.

இந்தப் பகுதி, போஜ்சாலா / கமல் மௌலா மசூதி அமைந்திருக்கும் இடமாகும். தார் மாவட்டம் பழங்குடியின மக்களை அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு கடவுள் விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கார்பன்-சோதனை மூலம், சிலையின் வயதைக் கண்டறியும் பணியும் தொடங்கியிருக்கிறது.

இவ்விடத்தை வாக்தேவி (சரஸ்வதி) கோயிலாக இந்து மக்கள் நம்பி வரும் நிலையில், முஸ்லிம் மக்களோ, கமல் மௌலா மசூதி அமைந்திருக்கும் இடமாகக் கருதுகிறார்கள்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வின்போது, பழங்கால சேஷசயன விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. புல்தானா மாவட்டம் சிந்த்கேத் ராஜா பகுதியில் கோயிலின் கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொல்லியல் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்ட நிலைடியில், 7 அடி ஆழத்தில் மிகப் பெரிய, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, சேஷசயன விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com