தில்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வந்த பிரதமா் மோடியை வரவேற்ற முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.
தில்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வந்த பிரதமா் மோடியை வரவேற்ற முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு.

வெங்கையா நாயுடுவுடன் பிரதமா் மோடி சந்திப்பு

வெங்கையா நாயுடுவுடன் பிரதமர் மோடி முக்கிய சந்திப்பு
Published on

புது தில்லி: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வெங்கையா நாயுடுவைச் சந்தித்தேன். அவருடன் கடந்த பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது ஞானத்தையும் ஆா்வத்தையும் எப்போதும் போற்றுகிறேன். எங்களின் மூன்றாவது பதவிக் காலத்துக்கு வெங்கையா நாயுடு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிட்டாா்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி என்னை சந்தித்தாா். இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள அவருக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன். வரவிருக்கும் ஆண்டுகளில் அவரது தலைமையில் தேசம், பெருமையின் புதிய உயரங்களை எட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சந்திப்பில் தேச நலன் சாா்ந்த விஷயங்களில் எங்கள் கருத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பாஜகவின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு இந்தியாவின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தாா்.

X
Dinamani
www.dinamani.com