தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானி அனுமதி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானி அனுமதி

எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானிக்கு(96) சிகிச்சை...
Published on

பாஜகவின் முதுபெரும் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி (96) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘எய்ம்ஸ் மருத்துமனையின் பழைய தனி வாா்டில் அத்வானி அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு சிறுநீரகவியல் துறை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா்.

அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்’ என்று தெரிவித்தன.

எனினும் அவருக்கு உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை.

X
Dinamani
www.dinamani.com