செயற்கைக் கோள் மூலம் சுங்கக் கட்டண வசூல்: நிதின் கட்கரி தகவல்

செயற்கைக் கோள் மூலம் சுங்கக் கட்டண வசூல் செய்யும் தொழில்நுட்பம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரி
நிதின் கட்கரி
Published on
Updated on
1 min read

செயற்கைக் கோள் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டால், தடையற்ற பயணம், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் போன்றவை குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, இந்தியாவில் எலக்ட்ரானிக் சுங்கக் கட்டண தொழில்நுட்பம் குறித்துப் பேசினார். அதாவது, செயற்கைக் கோள் தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முறை கொண்டு வரப்படுவது, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் வெளிப்படையாகவும் மிக விரைவான சேவையை அளிக்கவும் வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில், தடையற்ற போக்குவரத்து மற்றும் நெரிசலற்ற பயணங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை எற்படுத்தும் என்றும் கூறினார்.

மத்திய அமைச்சர் பங்கேற்ற கருத்தரங்கில் பல்வேறு விஷயங்களும் விவாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், சுங்கக் கட்டண வசூல் மென்பொருள், குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பு, மிக அடிப்படையான சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, பல வழித்தட சாலைகளை உருவாக்குதல் போன்றவையும் செயற்கைக் கோள் சுங்கக் கட்டண வசூல் முறைக்கு அவசியம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, சாலைகளில் எலக்ட்ரானிக் சுங்கக் கட்டண வசூலிக்கும் அமைப்புகள் பொருத்தப்பட்டு, ஒரு வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் தொலைவைக் கணக்கில் கொண்டு கட்டணத்தை வசூலிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com