புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக கருப்பு தினம் அனுசரிப்பு: மே. வங்க பார் கவுன்சில்

ஜூலை 1-ஆம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் ஜூலை 1-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும், அன்றைய தினம் பார் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க பார் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”ஜூன் 25-இல் நடைபெற்ற பார் கவுன்சில் கூட்டத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 1-ஆம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய சட்டங்கள் மக்களுக்கு விரோதமானதாகவும், ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும், மக்களை சிரமத்தில் தள்ளும் விதமாகவும் உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் எவ்வித நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரவர் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் புதிய சட்டங்களுக்கு எதிராக பேரணி நடத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயா் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் மக்களவையில் கடந்தாண்டு டிசம்பா் 21-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி ஒப்புதல் வழங்கினாா். இதையடுத்து, இந்தப் புதிய சட்டங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com