இதுதான் உலகத்தரம் வாய்ந்த தில்லி விமான நிலையமா? வைரலாகும் விடியோ

தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை பாதிக்கப்பட்டு மழை நீட் கொட்டுவது வைரலாகியிருக்கிறது.
தில்லி விமான நிலையம்
தில்லி விமான நிலையம்
Updated on
1 min read

தில்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், கூரை வீடுகளில் தண்ணீர் ஒழுகலாம், ஆனால், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் என்று புகழப்படும் தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை பிய்த்துக்கொண்டு தண்ணீர் கொட்டுவது பேசுபொருளாகியிருக்கிறது.

இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நேற்று இரவு முதல் தில்லியின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக தில்லியில் மழை வெளுத்து வாங்கும் நிலையில், உலகிலேயே மிகச் சிறந்த விமானம் நிலையம் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டி தில்லி விமானப் பயணிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல், தில்லி விமான நிலையத்தின் முதல் வளாகத்தின் மேற்கூரை கனமழை காரணமாக இடிந்து பயணிகள் வந்த கார் மீது விழுந்ததில் ஒருவர் பலியானார். காரில் இருந்த ஆறுர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நேரிட்ட இந்த சம்பவம் பயணிகளை அச்சமடையச் செய்துள்ளது.

இதனால், விமான நிலையத்தில் விபத்து நிகழ்ந்த பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் புறப்பாடு மற்றும் தரையிறங்குவது மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் புது தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து வந் நிலையில் மக்கள் கடும் சிரமத்தை எதிா்கொண்டு வந்தனர்.

ஆனால், கடந்த இரண்டு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தாலும், மழை ஏதும் பெய்யவில்லை. இந்நிலையில், வானிலை நிலையம் கணித்திருந்தபடி வியாழக்கிழமை காலையில் நகரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வந்த தில்லி மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்திருந்தது. ஆனால், கனமழை இரண்டாவது நாளாக நீடித்தால் சாலைகளில் வெள்ளம் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com