இந்திய ராணுவ, கடற்படைத் தளபதிகளான பள்ளிப்பருவத் தோழர்கள்!

இந்திய ராணுவ, கடற்படைத் தளபதிகளின் ஒற்றுமை!
இந்திய ராணுவ, கடற்படைத் தளபதிகளான பள்ளிப்பருவத் தோழர்கள்!

இந்திய ராணுவத் தளபதியாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 30) பொறுப்பேற்கவுள்ள லெஃப்டிணண்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியும் கடற்படைத் தளபதியான அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பள்ளி பருவத் தோழர்கள் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ரேவா பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் இவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். 1970களில் இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பில் ஒருசேர பயின்றுள்ளனர் என்ற தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஏ. பரத் பூஷண் பாபு எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்பும், பிற்காலத்திலும் இவர்கள் இருவரது நட்பு தொடர்ந்தது.

தற்போது இந்திய முப்படைகளின் உயர் பதவிகளில் இவர்கள் இருவரும் பொறுப்பேற்றுள்ளனர். பள்ளிப்பருவத் தோழர்கள் இருவரும் தற்போது கடற்படை, ராணுவ தளபதிகளாக மாறியிருப்பதன்மூலம், இவ்விரு படைகளிடையே உறவை வலுப்படுத்த பேருதவியாக அமையுமென உயரதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com