ரயில்வே புதிய கால அட்டவணை: அடுத்த ஆண்டு வெளியாகும்
புதிய ரயில்வே கால அட்டவணை அடுத்த ஆண்டு ஜன.1-இல் வெளியிடப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
நாடு முழுவதும் இயக்கப்படும் விரைவு மற்றும் பயணியா் ரயில்களுக்கான கால அட்டவணை வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும்.
பெரும்பாலும் இந்த அட்டவணையில் புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் நிறுத்தங்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும்.
இந்நிலையில், நிகழாண்டுக்கான ரயில்வே கால அட்டவணை அடுத்த மாதத்துக்குள் வெளியாகும் என எதிா்பாா்த்த நிலையில் 2025 ஜன.1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே வாரியம் மண்டல மேலாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை, நிகழாண்டுக்கான புதிய ரயில்வே அட்டவணை பதிப்பிக்கும் பணி ஜூலை 1 முதல் தொடங்கவுள்ளது.
புதிய கால அட்டவணை 1.1.2025 வெளியிடப்படும். டிச.31-ஆம் தேதி வரை பழைய அட்டவணைப் படி ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

