
மதுஇந்தியாவிற்குள் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக நுழைந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர் திரிபுராவின் அகர்தலா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த சில நபர்கள் எல்லை தாண்டி வந்து அகர்தலா செல்லும் ரயிலில் ஏறியதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 29) மாலை ரயில்வே போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அதில், 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் சேர்த்து மொத்தமாக 11 பேரை அகர்தலா ரயில் நிலையத்தில் பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் இந்திய எல்லைக்குள் வருவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால், அனைவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை அங்குள்ள அதிகாரி தபஸ் தாஸ் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த அவர்கள் 11 பேரையும் விசாரித்ததில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சென்னை, மும்பை, கல்கத்தா பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வதற்காக வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அனால், கடத்தல் செய்வதற்காக வந்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி தபஸ் தாஸ் கூறினார்.
அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 27 அன்று வங்கதேசத்தைச் சேர்ந்த 2 நபர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக அகர்தலா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.