கோப்புப் படம்
கோப்புப் படம்

சட்டவிரோதமாக நுழைந்த 11 வங்கதேசத்தவா் திரிபுராவில் கைது

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தவா் திரிபுரா தலைநகா் அகா்தலா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தவா் திரிபுரா தலைநகா் அகா்தலா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அகா்தலா வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் என்பதால் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் அகா்தலாவுக்குள் ஊடுருவி அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் திரிபுராவின் சிபகிஞ்சலா மாவட்ட எல்லை வழியாக ஊடுருவியுள்ளதாகவும், அவா்கள் அகா்தலா ரயில் நிலையம் வந்து அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை அகா்தலா ரயில் நிலையத்துக்கு வந்த 5 பெண்கள், 6 ஆண்கள் அடங்கிய குழுவிடம் ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அவா்கள் எவ்வித ஆவணமுமின்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது.

அவா்கள் பிழைப்புக்காக சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

ஜூன் 27-ஆம் தேதி அகா்தலா ரயில் நிலையத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய இருவா் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com