திருப்பதியில் கௌதம் கம்பீர் சாமி தரிசனம்!

திருப்பதியில் கௌதம் கம்பீர் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியில் கௌதம் கம்பீர் சாமி தரிசனம்!
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக முன்னாள் எம்பியுமான கௌதம் கம்பீர் சாமி தரிசனம் செய்தார்.

மேலும், டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக தலைவருமான கெளதம் கம்பீர் கூறுகையில், "ஒட்டுமொத்த நாடும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணியை வாழ்த்த விரும்புகிறேன்'' என்றார்.

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்து கூறுகையில், “உலகக் கோப்பை வெற்றியுடன் டி20 வாழ்க்கையை முடித்துக் கொள்வதைவிட சிறந்தது என்ன இருக்கப்போகிறது. அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய செய்திருக்கிறார்கள்.

நான் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். அவர்கள் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com