தில்லியில் ராணுவ தலைமைத் தளபதியாக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற உபேந்திர துவிவேதி. உடன், இப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மனோஜ் பாண்டே.
தில்லியில் ராணுவ தலைமைத் தளபதியாக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற உபேந்திர துவிவேதி. உடன், இப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மனோஜ் பாண்டே.

ராணுவ புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர துவிவேதி பொறுப்பேற்பு

இந்தியாவின் 30-ஆவது ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர துவிவேதி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்தியாவின் 30-ஆவது ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர துவிவேதி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) நிறைவடைந்ததையடுத்து உபேந்திர துவிவேதி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சீனாவுடனான எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சிக்கல்களை இந்தியா எதிா்கொண்டு வரும் நிலையில், 13 லட்சம் வீரா்களைக் கொண்ட பலம் வாய்ந்த இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை துவிவேதி ஏற்றுள்ளாா். தலைமைத் தளபதி என்ற முறையில், கடற்படை மற்றும் விமானப் படையை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் அவா் பெற்றுள்ளாா்.

ராணுவ கல்வி மையமான சைனிக் பள்ளியில் பயின்றவரான துவிவேதி, 1984-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் ரைஃபிள்ஸ் படைப் பிரிவில் இணைந்தாா். பின்னா், அதை வழிநடத்திய அவா், தனது 40 ஆண்டுகால ராணுவப் பணியில் பல்வேறு படைப் பிரிவு மற்றும் வெளிநாட்டு நியமனங்களில் பணியாற்றியுள்ளாா்.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பு விவகாரங்களில் துவிவேதி சிறந்த அனுபவம்வாய்ந்தவா். இந்திய ராணுவத் தளவாடங்களை நவீனமயமாக்குதல் மற்றும் உள்நாட்டில் ஆயுத உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்தியதில் அவா் முக்கியப் பங்கு வகித்தவா்.

X
Dinamani
www.dinamani.com