பெப்சி
பெப்சிinstagram

பெப்சி புதிய இலச்சினை அறிமுகம்

புதிய பெப்சி இலச்சினை இந்தியாவில் அரங்கேற்றம்
Published on

பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சி தனது முந்திய இலச்சினையில் இருந்து மாற்றப்பட்ட புதிய இலச்சினையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் புதிய சந்தைப்படுத்தலின் அங்கமாக இலச்சினை அறிமுகத்தை பெரியளவில் நிகழ்த்தி வரும் பெப்சிகோ, இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கடந்த 14 ஆண்டுகளில் இலச்சினை மாற்றியமைக்கப்படுவது இதுவே முதன்முறை என அமெரிக்க குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள இந்திய நுழைவாயில் நினைவுச்சின்னத்தில் பெப்ஸி குளோப் இலச்சினை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது.

முந்தைய வடிவத்தில் இருந்து இலச்சினை பெறப்பட்டாலும் நவீன அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலர் பேலட்டில் எலெக்ட்ரிக் நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com