அம்பானி வீட்டுத் திருமணம்: பாடகிக்கு இவ்வளவு தொகையா?

பிரம்மாண்ட திருமண கொண்டாட்டம்: ரிஹானாவுக்கு கோடிக்கணக்கில் தொகை!
அம்பானி வீட்டுத் திருமணம்: பாடகிக்கு இவ்வளவு தொகையா?
Published on
Updated on
1 min read

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இருவரின் திருமணத்துக்கு முந்தைய மூன்று நாள் நிகழ்ச்சிதான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

இந்திய தொழிலதிபர்கள் தொடங்கி உலக பெரும் பணக்காரர்கள் பில் கேட்ஸ், இவான்கா டிரம்ப், மார்க் ஸுக்கர்பெர்க், பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அணிவகுக்கும் 3 நாள் கொண்டாட்டம் குஜராத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இந்த நிகழ்வில் பாடகி ரிஹானா இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இதற்காக அவருக்கு அளிக்கப்படும் தொகை 8 முதல் 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.66 முதல் 74 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாம்நகரில் ரிஹானா வந்திறங்கிய போது அவர் கொண்டு வந்திருந்த ஆள் உயர சூட்கேஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக 2018-ல் முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணத்தில் பாடகி பியான்ஸ் பங்கேற்றார். அவருக்கு ரு.33 கோடி அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இஷா அம்பானி- ஆனந்த் பிரமல் திருமண செலவு என்பது 100 மில்லியன் டாலர் என கார்டியன் தெரிவித்துள்ளது. (தற்போதைய இந்திய மதிப்பில் 800 கோடி ரூபாய்)

என்கோர் ஹெல்த்கேர் நிறுவனர் விரேன் மெர்சண்டின் மகள் ராதிகா மெர்சண்ட். ராதிகாவின் தந்தை அப்பல்லோ ட்யூப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினரும் கூட.

ஆனந்த் அம்பானி (28) - ராதிகா மெர்சண்ட் (29) திருமணம் ஜூலையில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com