நாடு முழுவதும் மார்ச் 10-ல் விவசாயிகள் ரயில் மறியல்

விவசாயிகளின் உறுதியான போராட்டம்: மார்ச் 10 ரயில் மறியலில் சங்கங்கள் அறிவிப்பு
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பல்வேறு விவசாய அமைப்பினா் தலைநகா் தில்லி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க, போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்படுகளை மேற்கொண்டுள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில எல்லைகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தடை மீறி தில்லிக்குள் நுழைய விவசாயிகள் முயற்சித்து வருகின்றனா். தடையை மீறும் விவசாயிகளை போலீஸாா் கைது செய்து வருகின்றனா். மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளைத் தடுத்து வருகின்றனா். இதில் ஒரு விவசாயி உயிரிழந்ததோடு, பல விவசாயிகள் காயமடைந்தனா். இந்த நிலையில், நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மார்ச் 10ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும், தில்லியில் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன. மேலும் நாடு முழுவதிலும் இருந்து மார்ச் 6ஆம் தேதி விமானம், ரயில், பேருந்து மூலம் தில்லி செல்ல திட்மிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com