
Centre neglecting 73 pc of population that belongs to marginalised sections of society: Rahul .
பாட்னா: மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவிகிதம் பங்கு வகிக்கும் பின்தங்கிய சமூகத்தினரை மத்திய அரசு புறக்கணிக்கிறது’ என்றுகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மக்கள் நம்பிக்கைப் பேரணி’யில் உரையாற்றிய ராகுல் காந்தி, "பாஜக" மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்ட முயற்சிப்பதாகவும், ஆனால் இந்த வெறுப்புணர்வு சந்தையில் "நாங்கள்(காங்கிரஸ்) அன்பை விதைத்து வருகிறோம்.
"நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவிகிதம் பங்கு வகிக்கும் பின்தங்கிய சமூகத்தினரை மோடி அரசு புறக்கணித்துள்ளது." நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டினார்.
அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தைக் குறிப்பிட்டு பேசிய ராகுல், ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கு எதிரானது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.