காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே

மோடி தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

நாட்டின் வளா்ச்சிக்கும், அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கவும் வரும் மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
Published on

பாட்னா: வரும் வரும் மக்களவைத் தோ்தலில் மோடி தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தார்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மக்கள் நம்பிக்கைப் பேரணி’யில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே,

காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே
நாடு முழுவதும் மார்ச் 10-ல் விவசாயிகள் ரயில் மறியல்

வரும் மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஆனால், இதைக் கண்டு எதிா்க்கட்சித் தலைவா்கள் பயப்படவில்லை.

"நாட்டின் வளா்ச்சிக்கும், அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கவும் வரும் மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com