ஃபோனில் கிரிக்கெட் பார்த்ததே ரயில் விபத்துக்குக் காரணம்: அஸ்வினி வைஷ்ணவ்

ஃபோனில் கிரிக்கெட் பார்த்ததே ரயில் விபத்துக்குக் காரணம்: அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணம் ரயில் ஓட்டுநர்கள் செல்ஃபோனில் கிரிக்கெட் பார்த்ததே என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், ஓட்டுநர்களின் அலட்சியமே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ்
மகன் திருமணத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் நீட்டா அம்பானி; நடனமாடிய விடியோ வைரல்

புது தில்லியில் ரயில்வே பாதுகாப்பு முறைகள் குறித்து செய்தியாளர்களிம் பேசிய மத்திய அமைச்சரிடம், விசாகப்பட்டினம் விபத்து குறித்து கேட்டபோது இவ்வாறு பதிலளித்தார்.

தற்போது, ரயில்களில், பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், ரயில் ஓட்டுநர்கள் கவனமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யும் கருவிகளும் பொருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில், ரயில் பயணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், விபத்துகள் தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com