
மெட்டா நிறுவனத்தின் சமூகவலைதள செயலிகளான முகநூல் (ஃபேஸ்புக்), இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியுள்ளன.
உலகம் முழுவதும் 30 நிமிடங்களுக்கும் மேலாக முகநூல், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கின. பயனர்களின் கணக்கு செயலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் உள்நுழைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், உலக அளவில் இவ்விரு செயலிகளும் முடங்கியுள்ளன.
உலக அளவில் முகநூல், இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பேஸ்புக்டவுன், இன்ஸ்டாகிராம்டவுன் ஆகிய இரு ஹேஷ்டேக்குகள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. z
முகநூல், இன்ஸ்டாகிராம் முடங்கியதைத் தொடர்ந்து டிவிட்டரில் (எக்ஸ்) பயனர்கள் பலர் ஒரே நேரத்தில் குவியத்தொடங்கியுள்ளதாக கேலியாக பலர் விடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டவுன்டிடெக்டர் எனப்படும் கருவியில் கண்காணிப்பு கருவியின் தரவுகளின்படி, இரவு 8.45 மணியளவில் ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகநூல், இன்ஸ்டாகிராம் செயலியின் 77 சதவிகித பயனர்கள் தங்கள் கணக்கு செயலியிலிருந்து வெளியேறியதாக புகார் பதிவு செய்துள்ளனர். உள்நுழைவதிலும் சிக்கல் இருந்ததாக புகார்கள் பதிவாகியுள்ளன.
இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் எந்தவித விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.