நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ: மோடி தொடக்கிவைத்தார்!

கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் முதல் இந்திய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.
மோடி தொடக்கிவைத்தார்
மோடி தொடக்கிவைத்தார்

கொல்கத்தாவின் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

மேற்கு வங்கத்தில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தை தொடக்கிவைத்தார்.

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 4.8 கி.மீ., இதற்கிடையே ஹுக்ளி ஆற்றை கடக்க 32 மீ. ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையேயான 4.8 கி.மீ. மெட்ரோ பாதைக்கு மட்டும் ரூ. 4,965 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர், பள்ளி மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com