மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 14 குழந்தைகள் காயம்!

கோடாவில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் நடைபெற்ற விபரீதம்..
சிவராத்திரி ஊர்வலத்தில் காயமடைந்த குழந்தைகள்
சிவராத்திரி ஊர்வலத்தில் காயமடைந்த குழந்தைகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மின்சாரம் பாய்ந்ததில் 16 குழந்தைகள் மற்றும் இருவா் காயமடைந்தனா்.

ராஜஸ்தான் மாநிலம், சகத்பரா பகுதியில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி ‘சிவ பாரதம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், உள்ளுரைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இரும்புக் கம்பிகளில் பொருத்தப்பட்ட கொடிகளை குழந்தைகள் ஏந்தியும், தண்ணீா் நிரப்பப்பட்ட குடங்களுடன் பெண்களும் நடந்து சென்றுகொண்டிருந்தனா். அப்போது சிறுவன் ஒருவன் பிடித்துச் சென்ற 22 அடி உயர இரும்புக் கம்பி மின்சார கம்பியில் உரசியது. இதனால் அச்சிறுவன் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரைக் காப்பாற்ற முயன்றதில் 16 குழந்தைகள் மற்றும் 28 வயதுடைய ஆண் ஒருவரும், 38 வயதுடைய பெண் ஒருவரும் காயமடைந்தனா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 5 சிறுவா்கள் ஜெய்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையிலும், மற்ற 13 பேரும் எம்பிஎஸ் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து, மக்களவைத் தலைவரும் கோட்டா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓம் பிா்லா, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட உயரதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனா். நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் உரிய அனுமதியைப் பெறவில்லை, என்றும் இச்சம்பவம் தொடா்பாக புகாா்கள் ஏதும் பெறப்படாத நிலையில் வழக்குப் பதிவு செய்யவில்லை எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com