

இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு (ஐசிஏஐ) கவுன்சில் கூட்டத்தில் புதிய தேர்வு முறை திட்டமிடப்பட்டுள்ளது.
சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளருக்கான படிநிலைகள் பவுண்டேஷன் மற்றும் இண்டர் ஆகிய இரண்டு நிலைகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் மே/ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டு முறை நடத்தப்படும்.
இனி மாணவர்கள் ஆண்டில் மூன்று முறை ஜனவரி, மே/ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த தேர்வுகளை எழுதும் வாய்ப்பு பெறுவார்கள் என ஐசிஏஐ அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் மாணவர்களுக்கு பயனளிக்கும் எனவும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் தீரஜ் கண்டேல்வால் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முழுமையான விவரங்கள் விரைவில் ஐசிஏஐ சார்பில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.