மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்

மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி.
மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்திருப்பதை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டின், சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் மற்ற மகளிருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களவையில் அவரது வரவு, நமது 'மகளிர் சக்தி'க்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்,

இது நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவரது நாடாளுமன்ற பதவிக்காலம் மிக்க பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகியிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதுதில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பிரார்த்தனை செய்தனர்.
புதுதில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பிரார்த்தனை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com