

பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய கூறியுள்ளார்.
வடக்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சிலிகுரிக்கு சனிக்கிழமை விமானம் மூலம் புறப்பட்ட அபிஜித், பாக்டோக்ரா விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.
பிரதமர் மோடியைச் சந்திப்பது இதுவே முதல் முறை. அவருடன் பழக முயற்சிப்பேன். பாஜகவினர் வரவேற்ற விதம் என்னை உற்சாகப்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக வகுப்புவாத அரசியலில் ஈடுபடுகிறது என்ற எண்ணத்தைப் பரப்பும் ஒரு தீய முயற்சி நடந்து வருகிறது. கோட்பாட்டு ரீதியாக அதை எதிர்க்க முயற்சி செய்வேன் என்றார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த அபிஜீத் கங்கோபாத்யாய, தனது நீதிபதி பதவியை மார்ச் 5ல் ராஜிநாமா செய்தார். மார்ச் 7 அன்று அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.